அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி (55) இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு தலைவராக இருந்தார். இவர் ஆந்திராவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் சொந்த ஊருக்கு ஜெயராமன் வந்தார். இதையடுத்து விஜயவாடா நெடுஞ்சாலையில் ஜெயராமன் தனது காரில் ரத்த வெள்ளத்தில் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கார் உள்ளே இருந்த அவர் சடலத்தையும், மது பாட்டில்களையும் கைப்பற்றினார்கள். இதை கொலை வழக்காக பொலிசார் பதிவு செய்து ஜெயராமனின் மனைவி பத்மஸ்ரீ, சகோதரி மனிஷா ஆகியோரிடம் விசாரித்து வந்த நிலையில் அதிரடி துப்பு துலங்கியுள்ளது. அதாவது ஜெயராம் தலைவராக உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷிகா சவுத்ரி என்ற இளம் பெண் பணி செய்து வருகிறார். ஷிகா, ஜெயராமின் தம்பி மகள் ஆவார்.
இந்நிலையில் ஜெயராமுக்கும், ஷிகாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது இதையறிந்த ஜெயராமின் மனைவி பத்மஸ்ரீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக ஜெயராமுக்கும், ஷிகாவுக்க்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஷிகா தனது காதலர் ராகேஷின் உதவியுடன் ஜெயராமை கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் இவ்வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.