தமிழ் பிக் பாஸ் சீசன் 4 துவங்கவிருக்கும் தேதி வெளியானது!! ப்ரமோ விடியோவால் குஷியில் ரசிகர்கள்!

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது. இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், அறிவிப்பு தேதி தெரியாமல் மக்கள் அலைமோதி வந்தனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போன பிக்பாஸ் சீசன் 4 அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கவிருக்கிறது என தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியில் இதுவரை அதிகாரப்பூர்வாக வெளிவரவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 14 போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் கசிந்தன.

இதில் நடிகர் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன், நடிகை ரேகா, அணு மோகன், வேல்முருகன், சனம் செட்டி, நடிகை கிரண், விஜய் டிவி கப்பிரியல் என 90% சதவீதம் உறுதி செய்த பட்டியல் வெளியானது. இந்நிலையில் பிரபல ரிவி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதில் கமல் அறிவிப்பு தேதியை வெளியிட்டுள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.