தமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய புரோமோ.. பெரும் குழப்பத்தில் ரசிகர்கள்!! காணொளி இதோ..

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது. இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், அறிவிப்பு தேதி தெரியாமல் மக்கள் அலைமோதி வந்தனர்.

இந்நிலையில், நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது. ஆனால் ரசிகர்கள் இன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர், காரணம் இன்னும் 4 நாட்கள் தான் மக்கள் அந்த நிகழ்ச்சியை காண, ஆனால் இன்னும் பெரிய குழப்பத்தில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.

போட்டியாளர்கள் இவர்கள்தான் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தால் பரவாயில்லை, நிறைய லிஸ்ட் வருவதால் யார் தான் போட்டியாளர்கள் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. கடைசியில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தான் தெரியவரும். இன்னும் 4 நாட்களில் பிக்பாஸ் என்று கமல் கூறும் ஒரு புதிய வீடியோ இதோ,

 

Leave a Reply

Your email address will not be published.