தமிழ் சினிமாவின் பிரபல நடிகை அசின் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க! செம அழகு- புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் நடித்து இடம் தெரியாமல் போன நடிகைகள் ஏராளம், அதில் சிலர் மட்டுமே இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில் நடிகை அசின் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தவர், பல முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியானாலே படம் ஹிட்டாகி விடும். M.குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அசின், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

 

விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தி, இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கடைசியாக தமிழில் தளபதி விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து திரைத்துறையை கலக்கி வந்தார் அசின். இதையடுத்து இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கினார்.

 

அதனை தொடர்ந்து அவரின் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வருகிறார், சமீபத்தில் அவரின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் நீண்ட நாட்களாக நடிகை அசின் போது இடங்களில் காண முடியாத நிலையில், தற்போது அவரின் சமீபத்தையே புகைப்படம் வெளியாகி வைராகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published.