திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள்.அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது ஒரு அந்தஸ்தை போலவே கருதப்படும் சூழல் தமிழர்கள் மத்தியில் இன்னும் உள்ளது. எளிமையாக திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆடம்பர திருமணங்கள் நிகழ்வதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு தற்போது கொரோனா முற்றுப்புள்ளி வைத்து விட்டது. தாலி கட்டி செய்ய வேண்டிய திருமணம் தற்போது பல இடங்களில் மாஸ்க் மாட்டி செய்யப்படுகின்றது. அப்படி இணையத்தில் வைரலான திருமண காட்சி தான் இது.
தமிழர் கலாச்சாரத்தையே திசை மாற்றிய கொரோனா! திருமண கோலத்தில் மணமக்கள் செய்த வேலை!
