தமிழர்கள் உள்பட 45 பேரை கொன்றவன் தீவிரவாதியாக மாறியது ஏன்? பெற்றோர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

காஷ்மீரில் தமிழர்கள் உட்பட 45 வீரர்களை கொன்ற தீவிரவாதி அடில் அகமது ஏன் தீவிரவாதியாக மாறினான் என்ற திடுக்கிடும் தகவலை அவரின் பெற்றோர் வெளியிட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை தீவிரவாதி அடில் அகமது தர் (20) நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அடில் அகமது காஷ்மீரீன் லெதிபோரா கிராமத்தை சேர்ந்தவன். அகமதின் தந்தை குலாம் ஹசான் தர் மற்றும் தாய் பைமீதா தங்களது மகன் குறித்து பேசியுள்ளனர். அவர்கள் கூறுகையில், கடந்த 2016-ல் பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்கு அகமது வந்து கொண்டிருந்த போது அவனை வழிமறித்த ராணுவ வீரர்கள் அடித்து உதைத்துள்ளனர். அவருடன் இருந்த நண்பர்களயும் அடித்துள்ளனர். அதாவது கற்களை கொண்டு மற்றவர்கள் மீது எறிந்து வன்முறையில் ஈடுபட்டதாக அகமதை அவர்கள் அடித்தனர்.

அந்த ஆத்திரத்தில் தான் தீவிரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என அவன் முடிவெடுத்தான். இதன்பிறகே ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கத்தில் அவன் சேர்ந்தான். இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் வேலைக்கு சென்ற அகமது பின்னர் வீடு திரும்பவில்லை, மூன்று மாதங்கள் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர் தேடுதை விட்டுவிட்டோம், தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பம் எவ்வளவு வேதனையில் உள்ளதோ அதே வேதனையில் தான் நாங்களும் உள்ளோம். என் மகன் இறப்புக்கு காரணம் அரசியல்வாதிகள் தான், அவர்கள் முன்னரே இந்த பிரச்சனையை பேசி தீர்த்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.