தமிழரின் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் வந்த தாய்மாமன் சீர் வரிசை! சினிமாவை மிஞ்சிய காட்சி..!

தாய்மாமன் உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மரபு, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் ராஜா. ராஜாவின் தங்கையான மோகனப் பிரியாவுக்குத் திருமணமாகி ரிதன்யா, மித்ராஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அந்த இரு பெண்களும் பூப்பெய்து விடவே இருவருக்கும் சடங்கு செய்யும் நிகழ்வு  நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்காக ராஜா பாரம்பரிய முறைப்படி அனைவரும் வியக்கும் வண்ணம் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் 100 க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளை 15 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் படைசூழ கோபிசெட்டிபாளையத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மருத்துவரான ராஜாவே மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்து வியந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!