தமிழகம் வந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட இலங்கை பெண்: அடுத்து நடந்த சம்பவம்

தமிழகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இலங்கை இளம்பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் கொழும்புவை சேர்ந்தவர் பிரதீபா. இளம்பெண்ணான இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கு சதாம் உசேன் என்பவரை திருமணம் செய்த பிரதீபா இலங்கைக்கு மீண்டும் சென்றார். இதன் பின்னர் மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு பிரதீபா திரும்பினார். பின்னர் அவர் தமிழகத்திலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரதீபாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்நியர் ஊடுருவல் சட்டத்தின் கீழ் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.