தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு: கையெடுத்து கும்பிட்ட நடிகர் அஜித்- நேரலை பதிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்திய மக்களவை தேர்தல் 2019 : தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த அஜித்தை பார்த்தவுடன் ரசிகர்கள் தல தல என்று கத்தி ஆரவாரம் செய்தனர். இதனைப்பார்த்த அஜித், கையெடுத்து கும்பிட்டு நகர்ந்து செல்லுங்கள் என கூறியுள்ளார். அதுபோன்று நடிகர் விஜய்யும் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் கனிமொழி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார் மநீம தலைவர் கமல்… தி நகர் இந்தி பிரச்சாரசபையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் வாக்களித்து வருகின்றனர். மக்களோடு மக்களாக நின்று தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்,
இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை, 67 ஆயிரத்து 720 ஆகும். வாக்குச்சாவடி அலுவல் பணி உள்ளிட்ட தேர்தல் பணிகளில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவப்படையின் 14 ஆயிரத்து 400 பேர், காவல்துறையினர் 63 ஆயிரத்து 951 பேர் உட்பட ஒரு லட்சத்து 53 ஆயிரத்து, 633 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.