தம்பிக்காக பாடுபட்டு உழைக்கும் அண்ணன்களின் கதையை திரைப்படங்களில் அதிகளவில் பார்த்திருப்போம். பல இடங்களில் தம்பிகளுக்கு அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து உதவுவதையும் பார்த்திருப்போம். பெற்றவர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் பாசத்துக்கு சற்றும் குறைவில்லாததுதான் அண்ணன்_தம்பி இடையேயான பாசமும்! அதிலும் தனக்கு தம்பி பிறந்து புதுவரவாக அவர் வீட்டுக்கு வந்ததும் பிஞ்சு அண்ணன்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுவார்கள். இதுவும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான். குறித்த இந்த வீடியோவில் தன் வீட்டுக்கு புதுவரவாக வந்த தம்பியை, அந்த அண்ணன் கொஞ்சி விளையாடுகிறான். தம்பியின் கண், மூக்கு, காது என தொட்டு, தொட்டு விளையாட அது காதல் விளையாட்டுக்களையே மிஞ்சிய பாச விளையாட்டாக நம்மை வசீகரிக்கிறது. இதோ இந்த வீடியோவைப் பாருங்களேன்..உங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்.
தன் வீட்டுக்கு புதுவரவாக வந்த தம்பியை கொஞ்சும் அண்ணன்! நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..
