தன் மாமியார் பிறந்தநாளுக்கு குஷ்பு என்ன செய்தார் தெரியுமா? வெளியான புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

தென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார்.

தன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஷ்பு. மாமியார் என்றாலே மருமகள்களுக்கு ஆகாது என்பார்கள். ஆனால் குஷ்பு விஷயத்தில் அப்படி இல்லை. அவர் தன் மாமியாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தினை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, எங்கள் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்களின் இதயங்களையும், இல்லத்தையும் ஆட்சி செய்பவர். நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அவர் தான். என் மாமியார் தெய்வானை சிதம்பரம். எங்களை வழிநடத்த நீங்கள் கிடைத்ததற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். லவ் யூ அம்மா என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.