பிறந்தநாளில் இரண்டாவது காதலரை அறிமுகப்படுத்தியா ஸ்ருதி ஹாசன்! வெளியான புகைப்படம்- ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் குதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்ததாக இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த கிராக் படம் சூப்பர் ஹிட் அ.டி.த்.து வருகிறது. இதையடுத்து, நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இதுபற்றி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் முன்னாள் காதலர் பற்றி பேசியும் புகைப்படத்தையும் வெளிப்படுத்தினார். சமீபத்தில்கூட ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிய வருகிறது. தற்போது ஜனவரி 28ல் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தான் இரண்டாவது முறையாக காதலிப்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம். சமீபத்தில் மும்பையில் இருவரும் கை கோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் லீக்காகி வருகிறது. மேலும் பிறந்த நாளுக்கு ஸ்ருதி ஹாசனை இறுக்கி அணைத்தபடி சாந்தனு அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.