தன் காதலியை நரபலி கொடுத்த காதலன்..! இறைச்சியை சமைத்து தாய்க்கு விருந்தளித்த கொடூரன்..! காரணம் என்ன…?

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்குமா? என்று எதிர்பார்த்து கூட இருக்க மாட்டோம்! அப்படி ஒரு கொடூராமான சம்பவம் ஒன்று ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. 48 வயதான போலா அடீகோவின் மகன் 23 வயதான ஓவொலாபி, 22 வயதான டேலி-ஒலடெலி என்ற மாணவியை கவர்ந்து ஹோட்டலுக்கு அழைத்து சென்று, போதைக்கு ஆளாகி கொடூரமாக கொல்லப்பட்டதாக  பொலிசார் குற்றம்சாட்டியுள்ளனர்.பின்னர், 42 வயதான பிலிப் என்ற பாதிரியார், சுயமாக நடத்தும் தேவாலயத்திற்கு மாணவியின் உடலை கொண்டு சென்றுள்ளார். அங்கு ஒலடெலியின் தலையை ஒவொலாபி நொறுக்கிய பின், பிலிப் ஆட்டை அறுப்பது போல் மாணிவியன் தொண்டை அறுத்துள்ளார். பின்னர், மாணவியின் உடலை துண்டு துண்டாக்கிய பாதிரியார் பிலிப், சடங்கு படி பணக்காரர்களாக ஒலடெலியின் இறைச்சியை சமைத்து சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் படி இறைச்சியை சமைத்த ஒவொலாபி, தனது தாய் போலா அடீகோவிற்கு விருந்தளிக்க அவரும் அதை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில், தான் சாப்பிட்டது ஒலடெலியின் இறைச்சி என தனக்கு தெரியாது என அடீகோ கூறியுள்ளார். மேலும். பாதிரியார் பிலிப் மற்றும் மகன் ஒவொலா, சடங்கில் ஆட்டு இறைச்சி சமைக்கப்பட்டதாக கூறி தன்னை சாப்பிட வைத்ததாக தெரிவித்துள்ளார்.

நரபலி கொடுக்கப்பட்ட மாணவி, லாகோஸ் மாநில பல்கழைக்கழகத்தில் சமூகவியல் மாணவராக கடைசி ஆண்டில் படித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.கடந்த மாத தொடக்கத்தில் அவர் காணாமல் போனதை அடுத்து அவரது பெற்றோர் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மாணவியின் தந்தை, தனது மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விஷயத்தை கேட்பதற்கே மனது பதைபதைக்கிறது. அனால் இது போன்ற சம்பவங்கள் கேட்க்கும் போது நாம் செயல் அற்று போகிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.