தன் கணவருடன் செல்ஃபி எடுத்து புகைப்படத்தை வெளியிட்ட விஜே பிரியங்கா.. குவியும் லைக்ஸ்!

தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளினி தான் பிரியங்கா. ஒல்லி பெல்லி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றவர் பிரியங்கா. விஜய் டிவி ஷோக்களில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினிகளில் ஒருவர்தான் விஜே பிரியங்கா. பிரியங்கா எவ்வளவு தான் தன்னை கலாய்த்தாலும் அதையும் இவரே காமெடியாக்கி நிகழ்ச்சியை கொண்டு செல்வார். பிரியங்கா, மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என பல பிரபல நிகச்சிகளை தொகுத்து வழங்குகிறார். அதுமட்டுமில்லாமல், பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகைக் காண்பதற்காகவே பலர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு திறமையான தொகுப்பாளினி தான் விஜே பிரியங்கா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர், விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. இந்நிலையில், பிரியங்கா கணவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.