தன் கணவருடன் கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை நதியா! ட்விட்டரில் வெளியான குடும்ப புகைப்படம்…

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. அதனைத் தொடர்ந்து மந்திர புன்னகை, உயிரே உனக்காக, பாடு நிலவே என பல்வேறு படங்களில் நடித்து 80 – 90 காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நதியா. தமிழ் மட்டுமின்றி மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இவரின் இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. இவருக்கு 1988 ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்ற மராட்டியருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. திருமணத்திற்கு பிறகு பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினர். 2004 ஆம் ஆண்டு எம். குமரன். சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து தற்போது வரை துணை கதாப்பாத்திரத்தில்நடித்து வருகிறார்.

இளமை மாற தோற்றம் இன்னும் அவரது ரசிகர்களை அவர் புறம் கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றே கூறலாம். இவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது கணவர், மகள்கள் என அவர் எடுத்த புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.