தன்னை விட 42 வயது அதிகமானவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? – ரசிகர்கள் ஷாக்! யார் தெரியுமா அது? பார்த்த அசந்து போய்டுவீங்க!

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் விளக்கினார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை. விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.தமிழ் மட்டுமின்றி மகாநடி படத்தின் மூலம் தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தான் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அப்படி அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் என்ற பெயரை கீர்த்திக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.