தன்னை விட 17 வயது குறைவான பெண்ணுடன் நடிகர் ஆர்யாவுக்கு திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது  ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, கஜினிகாந்த் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது. கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர்.

அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. இந்நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் திகதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. சாயிஷாவுக்கு 21 வயதாகிறது. இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷாலின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.