தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். ரெமோ படம் ரசிகர்கள் மத்தில் இவருக்கென தனி இடத்தை பிடித்து தந்தது. தற்போது விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ரஜினியுடன் அண்ணாத்த படம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல பெயரையும், தேசிய விருதையும் தேடி தந்தது. மேலும் சமீபத்தில் இவர் நடித்த பெங்குயின் படம் கூட ஓடிடி-தளத்தில் வெளிவந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர் கீர்த்திக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதன் உள்ளே பல காதல் கடிதங்கள் மற்றும் கீர்த்தி சுரேஷின் ஆல்பம் பல இருந்துள்ளது. மேலும் அதில் குறிப்பாக : தன்னை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா ‘ வில் யூ மேரி மி ‘ என கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளார் அந்த ரசிகர். இதற்கு பதிலளித்த நடிகை கீர்த்தி மிகவும் நன்றி என கூறியுள்ளார்.