நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்றைய தினத்தில் அவரது புகைப்படம் வெளியாகியது.
இந்நிலையில் விஷால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு வந்த சிறுவனிடம் என்னை காப்பாத்திடுவியாடா என்று விளையாட்டாக கேட்கிறார்… சிறுவனும் சரிங்க சார் என்று பதிலளித்து அரங்கத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்