“தனுஷ், எங்க மகன் தான்” வழக்கை தூசி தட்டும் உயர்நீதி மன்றம்!முக்கிய ஆதாரத்துடன் களமிறங்கும் தம்பதிகள்…

தமிழ் சினிமாவை தாண்டி உலக சினிமா வரை கால் தடம் பதித்தவர் நடிகர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த அசுரன் படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது, பல நபர்கள் இவரின் நடிப்பை பாரிட்டனர். நடிப்பதையும் தாண்டி இவர் பாடல் வரிகள் எழுதுவது, படம் தயாரிப்பது, பாடல்கள் பாடுவது என பன்முக திறமை கொண்டவர் இவர். பிரபல நடிகர் தனுஷ் எங்க மகன் தான் என கூறி மேலூர் தம்பதிகள் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வாழ்க்கை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் போலியான ஆவணங்களை கொடுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறி. மீண்டும் மேலூர் தம்பதிகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர், உறவினர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆகியோர்களின் சாட்சிகளை விசாரித்த நிலையில் ஜனவரி 21ம் தேதி மீதமுள்ள 6 சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் என நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

விசாரணை நடந்த பிறகு தான் என்ன நடக்க போகிறது என்று தெரியும். அதுவரை சற்று காத்திருப்போம் என்று பலர் இந்த வழக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published.