சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

தற்போது மிக பிரபலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் ரம்யா கலந்து கொண்டுள்ளார். அவரின் கணவரான சத்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு பிரபல டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்த இவருக்கு, சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது 3 மாத மகனுக்கு பாடும் ட்ரைனிங்கை ஆரம்பித்துள்ளார் ரம்யா. மேலும், பாடும் மகனுக்கு ‘ரயன்’ என்று பெயரை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram