தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்… குவியும் லைக்குகள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் தமிழ் சினிமாவில் மன்மதன் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். அதனைத்தொடர்ந்து சச்சியன், பொல்லதவன், சிவா மனசுல ஷக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல வெற்றிப் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ௧ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கூட சந்தானத்தின் நடிப்பில் ‘பிஸ்கோத்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியானது ஆனால், ட்ரெய்லரில் அதுபோன்று எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகர் சந்தனாம் தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சந்தானத்தின் மகனா இது? என லைக்குகளை குவித்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published.