தனது ஜோடியை கொன்றவரை தேடி வந்து பழிவாங்கிய பாம்பு: தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் !!

தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி

சுசீலா.இருவரும் பிளாஸ்டிக் பொருட்களை இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்து வந்தனர். வேலையில்லாத சமயத்தில், மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வது வழக்கம். இரு தினங்களுக்கு முன்னர் முருகேசன், ஆடுகளை கருப்பசாமி கோவில் சாமி தோப்பில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.அங்குள்ள கருவேல மரத்தில் இரண்டு பாம்புகள் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தன. இதைப் பார்த்த முருகேசன் தன்னிடம் இருந்த கத்தியால் ஒரு பாம்பை துண்டாக வெட்டி கொன்றார்.

மற்றொரு பாம்பு தப்பியோடிய பின், முருகேசன் அதே இடத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.உயிர் தப்பிச் சென்ற பாம்பு, 30 நிமிடங்களுக்கு பின் மீண்டும் வந்து முருகேசனின் காலில் கடித்தது. வீட்டிற்குச் சென்ற முருகேசன், சிறிது நேரத்தில் வாய் வழியாக ரத்தம் கக்கி மயங்கினார்.

அதிர்ச்சியடைந்த மனைவி சுசீலா முருகேசனை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.தன் ஜோடியை வெட்டி கொன்ற முருகேசனை பழி தீர்த்த பாம்பு மீண்டும் வரும் என்ற அச்சத்தில் கஞ்சங்கொல்லை கிராம மக்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.