அபியும் நானும் படத்தின் மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பின்னர் கமல்ஹாசனின் உன்னை போல் ஒருவன், அஜிதின் மங்காத்தா, சித்தார்த்தின் தீயா வேல செய்யனு குமாரு, ஜீவாவின் கோ, ஜெயம் ரவியின் தனி ஒருவன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் கணேஷ் வெங்கடராமன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் கணேஷ் வெங்கட்ராமன்.

பிக் பாஸ் நிகழ்ச்சின் மூன்றாம் பரிசை வென்றார். மக்கள் மனதிலும் நல்ல இடத்தை பிடித்தார் கணேஷ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் கணேஷிற்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர். எனினும், சொல்லும் அளவு சினிமா வாய்ப்புகள் அமைய வில்லை. இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் நிஷா ஜோடிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் கொரொனா ஊரடங்கு வேறு தொடர்வதனால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.