தனது குடும்ப புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ராதிகா சரத்குமார்.. இவ்வளவு பெரிய குடும்பமா? வைரலாகும் புகைப்படம் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார். சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு. இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் தாயாக முக்கியப் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சரத்குமாரின் குடும்பம் மிகப்பெரியது என்பதும் அவருடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா தனது குடும்பத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்களுடன் கூடிய புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மற்றும் ராதிகா-சரத்குமாரின் மகன் ராகுல் உள்பட அனைவரும் உள்ளனர்.

ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தைகள் உள்பட அனைவரும் இருக்கும் இந்த புகைப்படத்தில் ‘ஃபேமிலி டைம்’ என்று நடிகை ராதிகா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய குடும்பமா என்று ஷாக்காகியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *