தனது குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித்.. இதுவரை நீங்கள் பாத்திராத புகைப்படம் ஒன்று

இந்திய அளவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர்கள் இரு பிரபலங்கள் தான் ஒன்று நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றால் மற்றொருவர் தென்னிந்திய சினிமாவின் ஆசை நாயகன் அஜித்குமார். தனது அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பைத்தாண்டி இயல்பு வாழ்க்கையில் அவரது நல்ல குணதிசாயங்களுக்காகவே இன்றளவும் மக்கள் மத்தியில் புகழின் உச்சியில் உள்ளார்.

தமிழில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 50 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தான் செய்யும் சிறிய உதவியானாலும் விளம்பரப்படுத்தும் இந்த காலத்தில் தல பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். திரையுலக ரசிகர்கள் பட்டாளமே எதிர்பார்த்த வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது மனைவி, மகளுடன், திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.இதுவரை நீங்கள் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!