விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட ஒன்றாகும். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீனில் சாண்டி, வனிதா, முகென், கவின், லொஸ்லியா, தர்ஷன் என பலர் பங்கேற்று வெற்றிகரமாக ஓடியது, இதில் முகென் ராவ் பிக் பாஸ் 3 சீசன் டைட்டில் வின்னர் ஆனார். முகென். மலேசியாவை சேர்ந்த இவர் நிறைய ஆல்பங்கள் பாடியுள்ளார், நிகழ்ச்சியில் முகென் பாடிய ஒரு பாடல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

அவருடன் பிக்பாஸில் கலந்துகொண்ட பலரும் படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது முகென் ராவ் தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. வெப்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அஞ்சனா அலி இயக்கத்தில் முகென் முதல் படம் நடிக்க இருக்கிறாராம். பிக்பாஸ் முகேன் ராவ் தனது காதலி யாஸ்மின் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வைரல் ஹிட் அடித்து வருகிறது.
மேலும் அவரது காதலி முகேன் குறித்த எமோஷனலான பதிவையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு என வாழ்த்துக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த ஜோடிகளின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.