தனது காதலனை அறிமுகம் செய்த நடிகை ஓவியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம் இதோ

நடிகை ஓவியா நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், அதனை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய அளவில் பிரபலமானார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஓவியா, படவாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் குத்தாட்டம் போட்டு வந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டார் ஓவியா.

அந்நிகழ்ச்சி மூலம் மிக பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பிக் பாஸ் நிகச்சியில் இவருக்காக ரசிகர்கள் ஆர்மி துவங்கினார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் கூட நடிகர் ஆரவுடன் காதல் ஏற்பட்டு, மருத்துவ முத்தம் எனும் சர்ச்சையில் சிக்கினார். படங்களில் ஏதும் ஒப்பந்தம் அகலாமல் இருந்து வரும் ஓவியா, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் முதன் முறையாக தனது காதலனை புகைப்படத்துடன் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை ஓவியா. இந்த புகைப்படத்தில் நடிகை ஓவியா, ஆண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கிறார். மேலும் அந்த பதிவில் ‘காதல்’ என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *