மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும். அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா தன் மகன், மற்றும் மகளுடன் செல்லமாக விளையாடிக் கொண்டு இருக்கிறார். அப்பா கைகளை நீட்ட மகன் அதை விளையாட்டுக்கு அடிக்கிறான். அதேபோல் மகளிடம் தந்தை கையை நீட்ட, அந்த செல்ல மகளோ அப்பாவின் கையில் முத்தம் கொடுத்து அணைக்கிறாள். இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படியொரு பொண்ணு மகளாக இருந்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான் என பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
தந்தை மீது மகள் வைத்திருக்கும் பாசத்தை அழகாக காண்பிக்கும் வீடியோ பாருங்க.. உருகிடுவீங்க..!
