நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் குறித்து பலரும் கருது தெரிவித்து வந்தனர். அதனை பொருட்படுத்தாமல் நடிகை வனிதா தனது யூடுப் பக்கத்தில் சமையல் விடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது வனிதா பிரச்சினை ஓய்ந்த நிலையில் காணப்படுகின்றார். கடந்த நாளுக்கு முன் இரவு திடீரென பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில் வனிதாவின் தந்தை விஜயகுமார் இன்று பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதற்கு வனிதாவின் தங்கையான நடிகை ஸ்ரீதேவி தானும், தனது தந்தையும் இருக்கும் புகைப்படத்தினை தனியாகவும், காணொளியாகவும் மாற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தற்போது வனிதா தான் குழந்தையாக இருக்கும் போது தனது தந்தை விஜயகுமாருடன் இருந்த புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கை பதிவிட்டிருக்கும் பதிவிற்கு போட்டியாக வனிதா இவ்வாறு பதிவிட்டிருக்கின்றாரா என்று ரசிகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram