“தடையை மீறி, போலீசாரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட பெண்”..! – கையை கடித்து குதறி போலீசார் மீது ரத்தத்தை பூசி..! வெளியான அதிர்ச்சி வீடியோ..!

உயிர்கொல்லி வைரஸான கொரோன வைரஸை பற்றி மக்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். அது நம்மிடத்தில் ஏற்படுத்தியுள்ள விஷயம் ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. நாடு முழுவது பல இடங்களில் மக்கள் அச்சத்தில் உள்ளதை நாம் தினம் தினம் பார்க்கிறோம். அதற்காக அரசு பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு, 144 தடை உள்ளது என்பது நமக்கு தெரியும்.

ஆனால மக்கள் ஒரு சிலர்  சாலைகளில் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். இந்நிலையில்  சால்ட் லேக் பகுதிக்கு நேற்யை தினம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரை போலீஸார்  நிறுத்தி எங்கே போகிறீர் என விசாரித்துள்ளனர். அதற்கு மருந்து வாங்க செல்வதாக தெரிவித்தனர். டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என கேட்ட போது அதை அவர்கள் காட்டவில்லை. இதனால் அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை.

உடனே காரை விட்டு இறங்கிய அந்த பெண்  போலீஸ்காரரை திட்டி தீர்த்துள்ளார். பின்னர் தனது பழைய காயத்தையும் கடித்து ரத்தம் வரவழைத்து அந்த ரத்தத்தை வெள்ளை சீருடை போட்டிருந்த அந்த போலீஸ்காரர் மீது பூசினார். என்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை உங்கள் மீது கொடுப்பேன் என போலீஸையே அந்த பெண் மிரட்டியுள்ளார் .

மேலும்,  இந்த சம்பவம் மக்களிடத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த காணொளிகள் இணையத்தில் தற்போது  வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி ……

Leave a Reply

Your email address will not be published.