தடையை மீறியதால் நடிகர் விமல் மற்றும் சூரிக்கு விதிக்கப்பட்ட அபராதம்…

நடிகர் விமல் சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து களவாணி படமும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இதன் பின் தொடர்ச்சியாக தூங்கா நகரம், எத்தன், மற்றும் வாகை சூட வா படங்களில் நடித்தார். வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானவர் சூரி. இப்படத்திற்கு பின்னர் பரோட்டா சூரி என்று அறியப்பட்டார்.

நடிகர் சூரி மற்றும் விமல் இருவரும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள். விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்துள்ளார் விமல். மேலும் நடிகர் சூரி தற்போது முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்து வருகிறார். இந்நிலையில் விமல், சூரி மற்றும் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மேலும் அங்குள்ள பேரிஜம் எனும் ஏரியில் மீன்பிடிப்பது போல புகைப்படங்கள் வெளியாகின, இதையறிந்த வனத்துறையினர். தடைவிதிக்கப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததால் விமல், சூரி உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ரூபாய் 2000 அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்ற தடைவித்தப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைய கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.