தங்கையின் திருமணத்திற்கு இ ற ந் த தந்தையை அழைத்து வந்த சகோதரிகள்!! மனதை நெகிழ வைத்த ச ம் ப வ ம்

சகோதரியின் திருமணத்திற்காக, உ யி ரி ழந்த தந்தையை சிலையாக வடிவமைத்து இன்ப அ தி ர் ச்சி கொடுத்துள்ளனர் சகோதரிகள். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் இரண்டும் மகள்களுக்கு திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உ யி ரி ழ ந்தார்.

தற்போது அவரது செல்ல மகள் லட்சுமி பிரபா திருமணத்திற்கு செல்வம் இல்லாமல் இருப்பது அவரது குடும்பத்திற்கும் மணமகளான அவரது மகளுக்கும் மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியது. இவர்களின் வருத்ததை போக்க ரூ 6 லட்சம் செலவில், லண்டனில் பணிபுரியும் மூத்த சகோதரி புவனேஷ்வரி தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்துள்ளார். சிலையானது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிலிக்கான் மற்றும் ரப்பரை கொண்டு தயாரிக்கபட்டது.

இந்த நிலையில் கடைசி சகோதரியும் மணமகளுமான லட்சுமி பிரபா உ யி ருடன் இ ல் லா த தனது தந்தை செல்வம் சிலை முன்பு மாலை மாற்றி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அதோடு லட்சுமி பிரபா தன் தந்தையின் சிலையை பார்த்து ஆனந்த க ண்ணீர் வ டி த்தார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *