தங்கைக்கும் அண்ணனுக்கும் ஏற்பட்ட காதல் !! – இறுதியில் நடந்த கொடூரம் !! அடக்கொடுமையே !

காதல் திருமணங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே நடக்கும் ஒரு விஷயம்.இந்தியாவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஒரு காதல் திருமணம் நடப்பது மிகவும் அரிதான விஷயம்.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிகப்படியான சாதிகள் காணப்படுவதால் காதல் திருமணங்களுக்கு பல்வேறு விதங்களில் எதிர்ப்புகள் அதிகமாக உருவாகின்றன.

இதனையும் மீறி தற்போது பல காதல் திருமணங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இதில் சில திருமணங்கள் பெற்றோர்களால் ஏற்கப்படுகிறது.ஆனால் பல திருமணங்கள் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றுவரை உடன் சேராமல் தனித்து ஒதுக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

ஆனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி காதல் திருமணம் பற்றியதுதான் என்றாலும் சிறிது முறைதவறிய காதலாக உள்ளது.முறை தவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னரங்கன். இவர் மனைவி மசணி. இவர்களின் மகன் மாதேஷ் (25).அதே பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவர் மனைவி மாஸ்தி. இவர்களின் மகள் சுமித்ரா (20).

மசணியும், மாஸ்தியும் அக்கா–தங்கை ஆவர்கள். இந்நிலையில் மாதேஷ் மற்றும் சுமித்ரா இடையில் காதல் மலர்ந்துள்ளது.மாதேசும், சுமித்ராவும் அண்ணன்–தங்கை முறையாவதால் இருவரின் பெற்றோர்களும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் நான்கு வருடத்துக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் இருவரும் தங்கள் பெற்றோரை பார்க்க வந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஏற்று கொள்ளவில்லை.இருவரும் காதல் ஜோடியை கடும் கோபத்தோடு திட்டியதாக தெரிகிறது.

4 ஆண்டுகள் கழித்து வந்தும் தங்களை பெற்றோர்கள் ஏற்கவில்லையே என 2 பேரும் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.அதன்படி, ஒரு மரத்தில் மாதேசும், சுமித்ராவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் சடலங்களை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த தற்கொலையில் அவர்கள் பெற்றோருக்கு சம்பந்தம் இருக்குமோ என்ற பாணியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.