தங்கமீன்கள் படத்தில் ராமின் மகளாக நடித்த குழந்தை இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

இயக்குனர் ராம் இயக்கி, நடித்த தங்கமீன்கள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்ற படம். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ பாடல் அப்பா_மகள் அன்பின் வலிமையையும் ஆழத்தையும் எளியோருக்கும் புரியும்வகையில் கவிஞர் ந. முத்துக்குமார் எழுதி உள்ளார்.

 

தங்கமீன்கள் படத்தில் ராமின் மகளாக செல்லம்மா என்னும் கேரக்டரில் சாதனா லெட்சுமி நடித்திருந்தார்.படப்பிடிப்பைத்தாண்டி இவரை நிஜமாகவே செல்லம்மா என்றுதான் ராம் அழைப்பாராம். சாதனா இப்போது துபாயில் உள்ள ஒரு இந்தியப்பள்ளியில் படித்துவருகிறார். சாதனா இயல்பாகவே நடனம், பாடலில் அசாத்திய திறமையுள்ளவர்.

தங்கமீன்கள் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியவிருதையும் பெற்றார் சாதனா. சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த பேரன்பு படத்திலும் சாதனா நடித்திருந்தார். 2013ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன சாதனா இப்போது இளம்பெண்ணாக வளர்ந்துவிட்டார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.