தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்புவின் வெற்றியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. நடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கலைஞன். நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, எழுதுவது, இயக்கம், இசை என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவரால் சினிமாவில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்க முடியவில்லை.
ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது, அதையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு தான் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் வெளியானது. 90எம்எல், மஹா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் சிம்பு பின் சில காரணங்களால், அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடை குறைத்து பழையபடி உள்ளார், ரசிகர்களும் அவரது லுக் காண ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் சிம்பு இன்று சமூக வலைதளத்தில் வர இருப்பது அனைவரும் அறிந்தது தான். தற்போது டுவிட்டரில் முதலில் அவர் போட்ட பதிவு இதோ,
Atman-SilambarasanTR#Atman #SilambarasanTR #STR pic.twitter.com/6TY4kujAOr
— Silambarasan TR (@SilambarasanTR_) October 22, 2020