ட்விட்டரில் கோப்ரா படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து.. வைரலாக்கு விக்ரம் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் திகழ்பவர் நடிகர் விக்ரம். படத்திற்காக எந்த ஒரு நடிகரும் செய்யாத அளவிற்கு தனது உடலை வருத்தி கொண்டு நடித்து வரும் ஒரே நடிகர் விக்ரம். என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து தூள், ஜெமினி, தில், சாமி, பிதாமகன் என பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் வாயடைக்கும் வகையில் பல விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து, கோப்ரா திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதை நடிகர் விக்ரமின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.