கிட்னியோடு வந்தால் திருமணம்! – வயது குறைந்த இளைஞனை காதலித்த பெண்ணின் பரிதாப நிலை! இப்படி கூடவா நடக்கும்?

தமிழகத்தில் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் கிட்னியை காரணம் காட்டி திருமணம் நிறுத்தியுள்ளதாக, இளம் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த நித்தியா(32) என்ற பெண் நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், நான் ஆலந்தூரில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ்(29) என்பவர் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார்.இருவரும் வாட்ஸ் அப் மூலம் நண்பராக பழகினோம். அதன் பின் நாளைடைவில் விக்னேஷ் என்னை காதலிப்பதாக கூறினார்.

நான் அவரை விட மூன்று வயது அதிகமான பெண் என்பதால், வேண்டாம் என்று மறுத்தேன், தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால், காதலை ஏற்றுக் கொண்டேன்.காதலிக்கும் போது விக்னேஷிடம் எனக்கு பிறவியிலேயே வலது பக்கம் கிட்னி மட்டும் இருப்பதாகவும், இது எனக்கே 4 வருடத்திற்கு முன்பு தான் தெரியும் என்று கூறினேன்.

அதற்கு விக்னேசும், நானும் கால்கள் தாங்கி தான் நடப்பேன் என்று என்னிடம் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கான தாம்பூலம் மாற்றி கொண்டனர்.இதனால் இருவரும் நெருக்கமாக பழகினோம். விக்னேஷ் இப்போது ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு எனது தந்தை காலமானார். அதன் பிறகு எங்கள் வழக்கப்படி பெண் வீட்டார் தான் திருமண செலவுகளை ஏற்ற வேண்டும். மேலும் 20 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் விக்னேஷ் தரப்பினர் கேட்டனர்.இதனால் விக்னேஷ் தரப்புக்கும் எங்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தற்போது, என்னை இரண்டு கிட்னியோடு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் மற்றும் அவரது வீட்டார் கூறிவிட்டனர்.

நான் நிச்சயிக்கப்பட்ட பிறகு காதலித்த விக்னேஷ் தான் கணவன் என்று உறவினர்களுக்கு எல்லோருக்கும் தெரியும். தற்போது கிட்னியை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திய விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.பொலிசார் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!