டெடிபியர் பொம்மையில் இறந்த மகனின் இதயதுடிப்பை கேட்ட தந்தை! மனதை உருகவைத்த காணொளி..!

அமெரிக்காவை சேர்ந்த ஜான் ரெய்ட் என்பவர் கடந்த வருடம் நடந்த ஒரு கார் விபத்தில் தனது 16 வயது மகனை இழந்து விட்டார். அந்த தந்தையின் கண்ணீர் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மகனை இழந்த அந்த தந்தை தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார். அதில் அவரது மகனின் இதயம் ஒருவருக்கு பொறுத்தப்பட்டு, அவர் உயிர் பிழைத்தார். மேலும், இறந்த மகனின் இதயத்தை பெற்ற அந்த நபர், அந்த தந்தைக்கு ஒரு டெட்டி பியரை பரிசாக அனுப்பினார். அதில் அவரது இதய துடிப்பு ரெகார்ட் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் முதலில் அந்த தந்தை பக்ஸை பிரித்ததும் அதில் ஒரு கடிதமும் எழுதப்பட்டிருந்தது. அதை படித்த அவர், உணர்ச்சிவசப்படுகிறார். அதன் பின்னர் அந்த டெடி பியர் பொம்மையை எடுத்து, அதன் இதய துடிப்பை கேட்டதும், கண்ணீர் விடுகிறார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!