டிவியில் டான்ஸ் ஆடும் அண்ணாச்சிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெஸ்ட் சரணவனாவுக்கு ஆப்பு..!!

செல்வரத்தினம் அண்ணாச்சியின் மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் ஆகும். இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து அதிலும் வெற்றியும் கண்டுள்ளார். இவர் தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். இப்போது இவர் குழந்தைகளுடன் சம்மர் ஆஃபர் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக செலுத்தப்பட்ட வருமான வரி தொடர்பாக விசாரணை சரவணா ஸ்டோர்ஸ்,

ரேவதி கடைகள் உள்ளிட்ட 4 குழும நிறுவனங்களில் காலை 7 மணி முதல் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. சென்னை & கோவை சரவணா ஸ்டோர்ஸ் கடைகளிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அதேபோல, பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 72 இடங்களில் காலை முதலே வருமான வரித்துறை சோதனை. தமிழகத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் ஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம்,

லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் ரெய்டு நடந்து வருகிறது. கோவையில் 2 இடங்களிலும் இந்த துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். மேலும் தி.நகர், பாடி கடை உரிமையாளர் வீடு,

அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக செலுத்தப்பட்ட வருமான வரிகளை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனையால் சரவணாஸ் ஸ்டோர்ஸ் குரூப் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!