தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளினி தான் டிடி. வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தான். தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. ரசிகர்களின் பேவரைட்டைனா டிடிக்கு ஹீரோ, ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான விஜய் தொலைக்காட்சிக்குச் சென்று இன்றுவரை பணியாற்றினார்.

கடந்த 1999ம் ஆண்டு உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தை தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சியாகும். தொடர்ந்து தன்னுடைய திறமையால் ஜோடி நம்பர் 1 உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது ஸ்பீட் என்ற நிகழ்ச்சியை தினாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது லாக்டவுனில் இருப்பதால் போரடிக்காமல் இருக்க வெப் சீரிஸை பார்த்து வருகிறாராம்.சமீபத்தில் கூட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான மனி ஹய்ஸ்ட் என்ற வெப் தொடர் குறித்து தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.