தமிழ் சினிமாவில் ஜி வி பிரகாஷின் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிக்கி கல்ராணி. அதன் பின்னர் யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற முன்னணி மொழிகளில் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த காதலை இருவரும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகிவந்தன. இருப்பினும் இருவரும் இந்த செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஐதராபாத் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
உலகெங்கும்ம் பரவி வரும் கொரோன தொற்று சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்காத நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டார். சமீபத்தில் ஆதி, நிக்கி இருவரும், ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.