ஜோ மைக்கல் வீடியோவை ரிலீஸ் பண்ண போறதாக கூறியுள்ளார்.. ட்விட்டரில் பரபரப்பு ஏற்படுத்திய மீரா..

மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த நாட்களுக்கு முன்னர், சூர்யா மற்றும் விஜய் இருவர் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டார். அதில் “சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை ஆபாசமாக திட்டினால், பதிலுக்கு நான் சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து அதே வார்த்தைகளில் வீடியோ வெளியிடுவேன்.

எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்போது நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஆவேன்.. அப்போது இதுபோன்ற ரசிகர்களை சைபர் புல்லிங் வழக்கில் உள்ளே தள்ளுவேன்” என்றும் கூறினார். மீரா மிதுனின் சர்ச்சையான பேச்சு தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது ஆரம்ப காலம் முதல் குற்றச்சாட்டு கூறி வரும் ஜோ மைக்கேல் என்பவர் பிரபல வலைத்தளம் ஒன்று என்னுடைய பேட்டியை வைத்து பணம் பார்த்து விட்டு டெலிட் செய்து விட்டது என்று கூறியுள்ளார்.

இதனைக்கண்ட, மீரா மிதுன், என்னடா ஜோ.. பொய் பேசுனா எந்த சேனலும் உன்னோட வீடியோவை வைக்காது. நீ சுப்ரீம் கோர்டுக்கே போனாலும் ஒன்னும் நடக்காது. நீ ஒரு வெத்து வேட்டு. நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் என்று கூறியுள்ளார்.. இப்பதிவானது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.