ஜோடி சேர்ந்த பிக் பாஸ் தர்ஷன் மற்றும் சத்யா சீரியல் நடிகை! தீயாய் பரவும் தகவல்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். பிக் பாஸ்ஸின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 3 சாண்டி, முகேன், கவின், லொஸ்லியா, தர்ஷன், வனிதா என பலர் பங்கேற்று பிரபலம் ஆகினர். தற்போது ஈழத்து தர்ஷன் சீரியல் நடிகையுடன் ஜோடி போட்டு ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஜீ தமிழில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சத்யா. இத்தொடரில் நடித்து வரும் ஆயிஷாவுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை சித் ஸ்ரீராம் தான் பாடியிருக்கிறார். இதுபோக தர்ஷன் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. தர்சன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

தர்ஷன் நடிக்கும் படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதேவேளை, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் வேலைகள் நடைபெறும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.