ஜெனிலியா தன் கணவருடன் இணைந்து தொழில் தொடங்கியுள்ளார்.!! என்ன தொழில் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கியவர் ஜெனிலியா. இவர் இந்தியிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் ஜெனிலியா. இவர் தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது குழந்தை தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் ஜெனிலியா.

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ரித்தீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு குடும்பம் வாழ்க்கை என செட்டிலான ஜெனிலியாவுக்கு தற்பொழுது இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் தற்போது குழந்தைகளுக்காக சமரசமாக வாழ்ந்து வருகிறார்கள் என்று வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது.

இந்நிலையில் கொரானா காலத்தில் இந்தியா முழுவதும் பொது முடக்கம் உள்ளதால் படப்பிடிப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரித்தீஷ் இருவரும் இணைந்து காய்கறி, கீரைகள் போன்றவற்றை வைத்து சைவ உணவுகளை அசைவ ருசியில் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர் இந்த தம்பதியினர்.

 

Leave a Reply

Your email address will not be published.