ஜி.வி.பிரகாஷ் இணையத்தில் வெளியிட்ட மகளின் கியூட்டான புகைப்படம்.. அழகிய மகளின் பெயர் என்ன தெரியுமா..? தீயாய் பரவும் புகைப்படம் இதோ..

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி. வி. பிரகாஷ் குமார். அதன் பின்னர் மதரசா பட்டினம், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், டார்லிங், காக்க முட்ட, தெறி என பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். காதல் பாடல்களால் நம் மனங்களை தன் விரல் இசையால் கட்டிப்போட்டவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். 50 படங்களையும் கடந்து இசையமைத்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. சூர்யாவின் நடிப்பில் சுதா கே பிரசாத் இயக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் குழந்தை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ”இதோ என் இளவரசி” என்ற கேப்ஷனோடு, குழந்தைக்காக நடத்தப்பட்ட ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதேவேளை, குழந்தைக்கு அன்வி என பெயர் சூட்டியுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடியின் மகளின் புதிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

Here is my princess #Anvi … @saindhavi_prakash @bhavanisre … photo by @mommyshotsbyamrita

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on

Leave a Reply

Your email address will not be published.