ஜி.வி.பிரகாசுக்காக காதல் கணவனை கழட்டிவிட்ட பிரபல நடிகை! வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகர் அபி சரவணன் – நடிகை அதிதி மேனன் கல்யாண மேட்டரில் புதிதாக இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பெயர் அடி பட ஆரம்பித்துள்ளது. பட்டதாரி படத்தில் இணைந்து நடித்த அபி சரவணன் – அதிதி மேனன் விவகாரம் தான் தற்போது தமிழ் திரையுலகில் ஹாட் டாபிக். காதலித்து கல்யாணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்த தனது மனைவி தற்போது ஆண் நண்பர்களுக்காக தன்னை பிரிந்துவிட்டதாக அபி சரவணன் கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அபி சரவணன் கூறியதாவது.

திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் வரை எங்கள் வாழ்க்கை நல்லவிதமாகவே சென்று கொண்டிருந்தது. என் மனைவி திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வந்தார். நானும் திரையுலகில் நல்ல வாய்ப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் என் மனைவிக்கு நடிகர் ஜி.விபிரகாஷின் நண்பர் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் மூலமாகத்தான் எனக்கு பிரச்சனை ஆரம்பமானது. ஜி.வி பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைப்பதாக கூறி என் மனைவியை அந்த நண்பர் அபகரித்துக் கொண்டார்.

என் மனைவியும் ஜி.வி பிரகாசுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்னை விட்டு பிரிந்துள்ளார். அதாவது திருமணமான நடிகை என்றால் பிரபல ஹீரோக்கள் ஜோடி சேர்க்க மாட்டார்கள். எனவே தான் அதிதி மேனன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருகிறார். உண்மையில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்க வைப்பதாக அவரது நண்பர் அளித்த வாக்குறுதி தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

அபி சரவணன். தனது மனைவி செய்த தவறுகளை மன்னிக்க தயாராக இருப்பதாகவும், அவர் திரும்பி வந்தால் போதும் என்று அபி சரவணன் கூறியுள்ளார். ஜி.வி.பிரகாசுடன் நடிப்பதற்காக காதலித்து 3 ஆண்டுகள் வரை ஒன்றாக வாழ்ந்து திருமணம் செய்த கணவனை நடிகை அதிதி மேனன் கழட்விட்டிருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.