பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம். இப்படங்கள் மூலமாக தான் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக பிரதிபலிக்க இருக்கிறார் நடிகை லாஸ்லியா.
சமீபத்தில் ஆச்சி நிறுவனம் வாங்கிய சோப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த சோப்பு விளம்பரத்துக்கு முன்பே இலங்கையில் ஷார்ட் பிலிம் சம்மந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. தற்போது இந்த விளம்பர வீடியோ மிகவும் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது…