சொகுசு கப்பலில் சிஷ்யைகளுடன் கூத்தடிக்கும் நித்தி…! நித்தியானந்தாவை ஓட ஓட விரட்டி அடிக்கும் நாடுகள்…! சிக்கலில் நித்தி…!

சமீபகாலமாக இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பேசப்பட்டு வரும் நித்தியானந்தா, தனக்காக தனிநாடு கேட்டு, அங்கேயே செட்டில் ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார். என்னதான் சிக்கல் மேல் சிக்கல் வந்தாலும் அசறாமல், பொலிசிடமிருந்து எஸ்கேப் ஆகி வருகின்றார். தனக்கென தனி நாடு சிஷ்யைகள் என வாழ்ந்துவரும் நித்தியானந்தா தற்போது சொகுசு கப்பலில் தலைமுறைமாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடன் இருந்த ஆண், பெண் சிஷ்யைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு, மர்மமான முறையில் சிஷ்யை ஒருவர் இறந்தது என பல வழக்குகள் நித்தியின் மீது இருக்கின்றது. தற்போது ஈக்வடார் நாட்டிலிருந்து துரத்தப்பட்ட நித்தியானந்தா, சொகுசு கப்பல் ஒன்றினை வாடகைக்கு எடுத்து, தென் அமெரிக்கா நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாருகின்றாராம்.

நித்தியானந்தாவின் பாஸ்போட் முடக்கப்பட்டுள்ளதால், பல நாடுகள் தங்களது நாடுகளில் நித்தியானந்தாவை தங்க வைப்பதற்கு அனுமதியளிக்கவில்லையாம். ஆதலால் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பல நாடுகள் துரத்திவிடுவதால், நித்தியானந்தா வேறு வழியில்லாமல் இந்தியா என்றால் எனக்கு உயிர் என்றும் அங்கு யாரும் எதிரி இல்லை என்று கூறி வருகின்றாராம். வேறுவழியில்லாமல் இந்தியா வந்து சரணடைந்துவிடுவார் என்றும் எந்த நேரத்திலும் நித்தியானந்தாவின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் அறிவிப்பினை வெளியிடலாம் என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.