சேரனின் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடித்துள்ள ரம்யா நம்பீசன்.. அட, இந்த கதாபாத்திரமா.? இது தெரியாமல் போச்சே..

நடிகை ரம்யா நம்பீசனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை. ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிகூட்டம், பீட்சா, சேதுபதி, சீதக்காதி என பல ஹிட் படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். மலையாளத்திரையுலகை பூர்வீகமாகக் கொண்டவர் இவர். அங்கு இருந்தே தமிழுக்கு வந்திருந்தார். இப்போது விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன்.

நடிகை ரம்யா நம்பீசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இவர் தொடர்ந்து வளர்ந்ததும் சின்னத்திரை தொகுப்பாளராகவும் ஆனார். கைரலி டிவியில் குட் ஈவ்னிங் என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இவர் “ஒரு நாள் ஒரு கனவு” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அதில் நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், நடிகை சோனியா அகர்வால் நாயகியாகவும் நடித்தார்.

அதில் சின்ன ரோல் மட்டுமே செய்த ரம்யா நம்பீசன், தொடர்ந்து சேரனின் “ராமன் தேடிய சீதை” படத்திலும் நல்ல ஒரு கேரக்டர் செய்தார். அதுதொடர்பான காட்சிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அம்மணி, புதிதாக youtube சேனல் ஒன்றும் தொடங்கியிருப்பது லேட்டஸ்ட் செய்தியாகும்.